பதவியை இராஜினாமா செய்யும் ஜப்பான் பெண் அரசியல்வாதி லங்கா4.கொம் / Lanka4.com

Keerthi
4 years ago
பதவியை இராஜினாமா செய்யும் ஜப்பான் பெண் அரசியல்வாதி  லங்கா4.கொம் / Lanka4.com

ஜப்பானின் டோக்கியோ பெருநகர சட்டமன்ற உறுப்பினரான Fumiko Kinoshita என்பவர் தான் வகித்து வந்த பதவியை அவர் இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

Fumiko Kinoshita அண்மையில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தின் போது சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தை ஓட்டி, விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தை ஓட்டி, விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

செய்த தவறுக்காக மக்களுக்கு முன்னால் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் மற்றும் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலக வேண்டும் என்பதே அந்த தண்டனையாகும்.

இதனடிப்படையில் Fumiko Kinoshita தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதுடன் நேற்று செய்தியாளர் சந்திப்பை நடத்தி மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியுள்ளார்.

Fumiko Kinoshita டோக்கியோ பெருநகர சட்டமன்ற   உறுப்பினராக பதவி வகித்து வந்தார். கடந்த ஜூலை மாதம் தேர்தல் பிரசாரம் நடைபெற்ற காலத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. அவர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்ததை அடுத்து, அவர் பிராந்திய அரசியல் கட்சியான Tomin First no Kai (Tokyoites First) இலிருந்து நீக்கப்பட்டார்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!