தும்பிக்கை அரைப் பகுதியை இழந்த 1 வயதேயான யானைக்குட்டி இறந்த துயரம்.

Prabha Praneetha
4 years ago
தும்பிக்கை அரைப் பகுதியை இழந்த 1 வயதேயான யானைக்குட்டி இறந்த துயரம்.

வேட்டையாடுபவர்களின் கண்ணிப் பொறியில் சிக்கி தனது தும்பிக்கை அரைப் பகுதியை இழந்த 1 வயதேயான யானைக்குட்டி  இறந்துள்ளது.

இந்தோனேசியா ஆசிய நாட்டின் முக்கிய தீவான , சுமாத்திராவின் காட்டுப் பகுதி ஒன்றில் இந்த கவலை தரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

வேட்டைக்காரரின் கண்ணி பொறியில் சிக்கி, தும்பிக்கை பாதியளவு துண்டித்த நிலையில், பாதுகாப்பு பிரிவினரின் உதவியுடன், தும்பிக்கையை பொருத்த
சிகிச்சைகள் இடம்பெற்றன. 

இரண்டு நாட்களின் பின்னர், கடும் காயத்தின் விஷ தொற்று பரவியதன் காரணமாக அந்த அப்பாவி யானைக்  குட்டி இறந்து விட்டது. 

குறிப்பாக ஆண் யானைகளை குறி வைத்து வேட்டையாடும் சம்பவங்கள் ஆசிய நாடான இந்தோனேசியாவின் சுமாத்திரா ,போர்ணியோ தீவுகளில் அதிகரித்து வருகிறது. 

ஆபிரிக்க  கள்ளச்சந்தைகளில் ஆண் யானைத் தந்தம்  அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்படுவதே இதற்கு காரணமாகும். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!