பாலத்தில் தொங்கிய நிலையில் 9 உடல்கள்

Prasu
4 years ago
பாலத்தில் தொங்கிய நிலையில் 9 உடல்கள்

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் சில சமயங்களில் தங்கள் எதிரிகளுடன் மோதிக்கொள்ளும்போது உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

அதன் தொடர்ச்சியாக அந்நாட்டில்  தற்போது பாலத்தில் தொங்கியபடி 9 ஆண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரது உடல் அருகிலுள்ள நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இக்கொலைகள் அப்பகுதியில் செயல்படும் கிரிமினல் கும்பல்களுக்கு இடையிலான தகராறுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அரசு அதிகாரி ஒருவர்  கூறினார். இதுகுறித்து "தீவிர விசாரணை" நடந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாத நிலவரப்படி, இந்த ஆண்டு கும்பல் தொடர்பான வன்முறையால் மொத்தம் 21,495 பேர் இறந்துள்ளனர், இதில் சராசரியாக மாதத்திற்கு 2,400 பேர் உயிரிழக்கின்றனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!