கான்பூரில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 123 ஆக உயர்ந்தது

Keerthi
4 years ago
கான்பூரில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 123 ஆக உயர்ந்தது

ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் ஜிகா வைரஸ் நோய் ஏற்படுகிறது. இதே ஏடிஸ் கொசுக்கள் தான் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களையும் பரப்புகின்றன. தேங்கி நிற்கும் நன்னீரில் தான் இந்த ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும். எனவே தண்ணீர் தேங்கும் பாத்திரங்களை எல்லாம் அப்புறப்படுத்த வேண்டும். ஜிகா வைரஸ்க்கு தடுப்பூசி எதுவும் இல்லை. இருப்பினும் ஜிகா வைரஸ் உயிரிழப்புகளை பெரும்பாலும் ஏற்படுத்தாது. உடலில் தடிப்புகள், காய்ச்சல், உடல்வலி, தலைவலி, மூட்டுக்களில் வலி, உடல்சோர்வு ஆகியவை ஏற்படும்.

இந்நிலையில் உ.பி., மாநிலம் கான்பூரில்  கடந்த அக்., 23-ல், முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 123 ஆக  உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் 86 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கான்பூர் மருத்துவமனை தலைமை சுகாதாரத்துறை அதிகாரி நேபால் சிங் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!