வேலை நேரத்துக்குப் பின்னர் தொடர்புகொண்டால், முதலாளிகளுக்கு அபராதம்
Prasu
4 years ago
வேலை நேரத்துக்குப் பின்னர் தொடர்புகொண்டால், முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை போர்த்துக்கள் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக வீட்டில் இருந்தவாறு பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அரிகரித்துள்ளமையில் ஊழியர்களின் நலன் கருதி இப் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சட்டத்தில் ஊழியர்களுக்கு வேலை தொடர்பில் ஏற்படும் தனிப்பட்ட செலவுகளுக்கு (மின்சாரக் கட்டணம், இணையப் பயன்பாட்டுக் கட்டணம்) இழப்பீட்டுத் தொகை அளிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஊழியர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கமுடியும் என்று நம்பப்படுகிறது.