மீண்டுமொரு கொரோனா அலையை இலங்கை சந்திக்கும் - வைத்திய நிபுணர் ரவி குமுதேஸ்
Reha
4 years ago
நாட்டில் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞான ரீதியான அம்சங்களைக் கையாள்வதில்லை. கொரோனா தொடர்பில் பொதுஜனப் பெரமுனவின் உறுப்பினர் அல்லது இராணுவத்தரப்பு தீர்மானங்களை எடுத்துவருகின்றது.
இந்த நிலையில் நாடு செல்லுமாயின் மீண்டும் ஒரு கொரோனா அலையினை மக்கள் சந்திக்க நேரிடும். இதன் போது ஆயிரக்கணக்கில் மக்கள் மரணிப்பார்கள். இதனை அரசாங்கம் பொறுப்பில் எடுக்காது என மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என விசேட வைத்திய நிபுணர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,மக்கள் இறப்பதனால் அரசியல்வாதிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. மாறாக இறப்பவர்களின் குடும்பங்களுக்குத் தான் பாதிப்பு. ஆகவே இது தொடர்பில் அரசாங்கம் நிபுணர்களுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுக்க வேண்டும் என்றார்.