சூட்கேசில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் வெளியான தகவல்!
சபுகஸ்கந்த மாபிம வீதிக்கு அருகில் சூட்கேசில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (04) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் 35 மற்றும் 40 வயதுடையவர் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாயில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கிடமான பயணப்பொதி ஒன்று இருப்பதாக சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்திற்கு நபர் ஒருவர் அறிவித்ததை அடுத்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறந்த பெண் கருப்பு மற்றும் சிவப்பு நிற கவுன் அணிந்து கைகால்களை கட்டியிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததாகவும் அவர் 5 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் சம்பவ இடத்திற்கு வந்த பதில் மஹர நீதவான் ரமணி சிறிவர்தன நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது..