சிகரெட்டிற்கும் விலை சூத்திரமா?
புகையிலை மற்றும் மது ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்ட, சிகரெட்டுகளுக்கான விலை சூத்திரத்தின் பிரகாரம் அடுத்த வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்படும் என குறித்த அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சிகரெட் கொள்வனவு செய்வதை குறைக்கும் வகையில் இந்த விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
“சிகரெட்டின் விலையை நிர்ணயம் செய்ய அறிவியல் மற்றும் வெளிப்படையான விலை நிர்ணய சூத்திரத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சிகரெட் விலை அதிகரிக்கப்படும் என நம்புகிறோம்.
இந்த சிகரெட்டுக்கான விலை சூத்திரம் அறிமுகமானது ஒரு வரலாற்று நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.