தெமட்டகொட ருவனின் மேலும் பல விலையுயர்ந்த வாகனங்களை கைப்பற்றிய பொலிஸார்

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தெமட்டகொட சமிந்த என்ற சமிந்த ரவிஜெயநாத்தின் மனைவியிடமிருந்த சுமார் 200 லட்சம் ரூபா பெறுமதியான டுயனெ Land Cruiser வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் பெறுமதி கணக்கிடமுடியாத மற்றொரு பிஎம்டபிள்யூ காரையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக பணம் சம்பாதித்த நபர்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், சட்டவிரோத சொத்துக்கள் அல்லது சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வாகனங்கள் வாங்குவதற்கான பணம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பது குறித்து வெளியிடாத காரணத்தினால் விசாரணை அதிகாரிகளால் வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த பெண் தற்போது பொரளையில் இரவு விடுதி ஒன்றை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகையில்,
தெமட்டகொடவில் வசிக்கும் தெமட்டகொட ருவன் என்றழைக்கப்படும் ருவன் சமில பிரசன்ன, 1800 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான வாகனங்கள் மற்றும் 225 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான தங்கம் ஆகியவற்றுடன் ஒக்டோபர் 29ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவற்றை வாங்குவதற்கான பணம் எவ்வாறு சம்பாதித்தமை என்பதை வெளியிட முடியாத காரணத்தால்
பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
“விசாரணைகள் தொடரும் நிலையில், நேற்று 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான மற்றுமொரு லேண்ட் ரோவர் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான பெரிய ஹோண்டா கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
தற்போது 340 மில்லியனுக்கும் அதிகம் பெறுமதியான காணிகள்இ வாகனங்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
அதிவேகமாக செல்வந்தர்களாகி பணம் சம்பாதிக்கும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.



