யாழ்பலசரக்கு கடை ஒன்றில் கொடிகட்டிப் பறந்த “பியர்” வியாபாரம்!
#SriLanka
#Jaffna
Mugunthan Mugunthan
3 years ago

யாழ்.பருத்தித்துறை - கரவெட்டி பகுதியில் உள்ள பலசரக்கு கடையில் பியர் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரது கடையிலிருந்து பெருமளவு பியரும் மீட்கப்பட்டிருக்கின்றது.
குறித்த பலசரக்கு கடைக்குள் வைத்து பியர் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தள்ளது.
இதனையடுத்து நெல்லியடி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று கடையை சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போது கடைக்குள் இருந்து பெருமளவு பியர் மீட்கப்பட்டதை அடுத்து , பலசரக்கு கடையின் உரிமையாளரும் ர் கைது செய்யப்பட்டுள்ளார்.



