சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்
#Police
#Death
Prathees
3 years ago

சப்புகஸ்கந்த, மாபிம பகுதியில் கைவிடப்பட்ட சூட்கேஸில் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பெண்ணின் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட நிஹால் தல்துவ இதுகுறித்து தெரிவிக்கையில்,
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வீதிக்கு அருகில் குப்பைக் கிடங்கில் கைவிடப்பட்ட சூட்கேஸில் பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
களனி பிரிவு மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் தற்போது அப்பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர்.
குறித்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிய களனி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.



