கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீராடுவோருக்கு எச்சரிக்கை
#Police
Prathees
3 years ago

அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக கதிர்காமம் மாணிக்க கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
மாணிக்க கங்கையில் பெருகிவரும் நீருடன் முதலைகள் நடமாடுவதால் ஆற்றில் குளிக்கும் போது கவனமாக பயன்படுத்துமாறு ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது மாணிக்க கங்கை ஆற்றில் 20க்கும் மேற்பட்ட ராட்சத முதலைகள் உள்ளதாகவும் நாகவீதி பாலம், இலக்கம் 02 பாலம் போன்ற இடங்களில் இந்த ராட்சத முதலைகள் அடிக்கடி நடமாடுவதை காணமுடிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் ஆற்றின் நீர்மட்டம் உயரும் போது கிராம மக்களும் வெளியூர் மக்களும் முதலை கடிக்கு ஆளாவதால் இந்த நாட்களில்மாணிக்க கங்கையில் நீராடும்போது பக்தர்கள் அவதானமாக இருக்குமாறு கதிர்காமம் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



