எரிவாயு தாங்கி வெடித்ததில் இருவர் காயம்
#Police
Prathees
3 years ago

வெலிகம, கப்பரதொட்ட பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வெடிப்புச் சம்பவத்தில் இரு ஊழியர்கள் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உணவகத்தில் இருந்த எரிவாயு தாங்கி வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.



