மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டை வந்தடைந்தது
Reha
3 years ago

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 44,730 கிலோகிராம் நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முதற்கட்ட விநியோகத்தில், நனோ நைட்ரஜன் திரவ உரம் கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு, இந்த உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சின் பணிப்பாளர் அஜந்த டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.



