கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த ஆபத்து குறைவு.. புதிய ஆய்வில் தகவல்..

Keerthi
3 years ago
கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த ஆபத்து குறைவு.. புதிய ஆய்வில் தகவல்..

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், தடுப்பூசி போடாதவர்களை விட மற்ற நோய்களால் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன..

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது..

தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸ்டான்லி சூ ஆய்வு மையம் இந்த ஆய்வை நடத்தியது.. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, "டிசம்பர் 2020 மற்றும் ஜூலை 2021-க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் 7 தடுப்பூசி பாதுகாப்பு டேட்டா லிங்க் தளங்களில் பதிவுசெய்யப்பட்ட சுமார் 11 மில்லியன் நபர்களிடையே ஒருங்கிணைந்த ஆய்வு நடத்தப்பட்டது.. அந்த ஆய்வின் முடிவில் " Pfizer-BioNTech மற்றும் Moderna தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களுக்கு, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களை விட குறைவான இறப்பு ஆபத்து உள்ளது.. 2 டோஸ் தடுப்பூசியையும் போட்டுக் கொண்டவர்கள், தடுப்பூசி போடாதவர்களை காட்டிலும், கோவிட்-19 அல்லாத காரணங்களால் இறக்கும் வாய்ப்பு 34 சதவீதம் அதிகம்.

இந்த ஆய்வின்படி, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள், நோய்த்தடுப்பு இல்லாதவர்களை விட 54 சதவீதம் இறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நோய்த்தடுப்பு மருந்துகள் பாதுகாப்பானது.. நோயை எதிர்த்து போராடுவதில் பயனுள்ளவை.." என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!