நவம்பர் முதல் பிப்ரவரி வரை சூரியன் உதிக்காது.. உலகின் தனித்துவமான கிராமம் எங்குள்ளது தெரியுமா..?

Keerthi
3 years ago
நவம்பர் முதல் பிப்ரவரி வரை சூரியன் உதிக்காது.. உலகின் தனித்துவமான கிராமம் எங்குள்ளது தெரியுமா..?

இந்த பூமியில் உள்ள பல தனித்துவமான இடங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. அதுபோன்ற ஒரு தனித்துவமான இடத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்..

இத்தாலிய நகரமான மிலனுக்கு வடக்கே 130 கிமீ தொலைவில் அமைந்துள்ள கிராமம் தான் விக்னெல்லா. ஆழமான பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மக்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.. இது மலைகளால் சூழப்பட்டுள்ள இடம் என்பதால், கோடை நாட்களில் கூட வெகு விரைவிலேயே இரவாகிவிடும்..

குளிர்காலத்தில் இங்கு நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். நவம்பர் முதல் பிப்ரவரி வரை சூரியனையே பார்க்க முடியாது.. மேலும் நவம்பர் 11 ஆம் தேதி சூரியன் மறைந்துவிடும் என்றும் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை சூரியனை பார்க்க முடியாது என்றும் கிராம மக்கள் கூறுகிறார்கள். ஆனால் சூரியன் இல்லாத காலக்கட்டத்தில், சூரிய ஒளிக்காக சில உள்ளூர் பொறியாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் ஒரு சிறந்த தீர்வை கண்டுபிடித்தனர். கிராமத்தில் சூரியனைப் பிரதிபலிக்கும் வகையில் மலையின் உச்சியில் ஒரு பெரிய கண்ணாடியை வைத்தனர். இதனால் சூரியன் போல் காட்சியளித்தது.

2005 ஆம் ஆண்டில், விகனெல்லாவின் மேயரான பியர்ஃப்ராங்கோ மிடாலியின் ஆதரவுடன், 100,000 யூரோக்கள் திரட்டப்பட்டு கண்ணாடியின் கட்டுமான பணி தொடங்கியது. நவம்பர் 2006 இல், 1.1 டன் எடையுள்ள 40 சதுர மீட்டர் கண்ணாடி, 1,100 மீட்டர் உயரத்தில் மலையின் எதிர் சரிவில் நிறுவப்பட்டது. இந்த கண்ணாடியானது கணினி மூலம் இயக்கப்படுகிறது. இது நாள் முழுவதும் சூரியனின் பாதையைப் பின்பற்றி, சூரிய ஒளியைப் பிரதிபலிக்கிறது.. இது ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு மணி நேரம் ஒளிரும். விக்னெல்லாவில் கண்ணாடி நிறுவப்பட்டதிலிருந்து உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!