கணவனைக் கொன்று எலிக்கு விருந்து வைத்த பெண்

Keerthi
3 years ago
கணவனைக் கொன்று எலிக்கு விருந்து வைத்த பெண்

பெண்ணொருவர் தனது கணவனைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி எலிக்கு உணவளித்த கொடூர சம்பவம் ரஷ்யாவில்  இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வசித்து வரும் 37 வயதான மெரினா கோகல் (Marina Kokhal) என்ற பெண்ணே இவ்வாறு தனது கணவர் அலெக்சாண்டர் யுஷ்கோவை கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல ரப் பாடகரான அலெக்சாண்டர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இதனால் அவரைத் தண்டிக்க நினைத்தே இவ்வாறு செய்ததாகவும் மெரினா தெரிவித்துள்ளார்.

சம்பவ தினத்தன்று சர்க்கரை நோயாளியான தனது கணவருக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தைக்  கொடுத்ததாகவும் இதனால் அவர் உயிரிழந்தாகவும் பின்னர் அவரது உடலுடன் உடலுறவு கொண்டதாகவும், அதன் பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எலிகளுக்கு உணவளித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இடம்பெற்ற  இச்சம்பவத்தின் வழக்கானது தற்போதும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இவ் வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை மெரினா வீட்டுக் காவலில் இருப்பார் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அவரது 4 வயது மகனைச் சந்திக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!