அமெரிக்காவில் நாய்க்குட்டியை கொன்றவருக்கு 2 ஆண்டு சிறை

Keerthi
3 years ago
அமெரிக்காவில் நாய்க்குட்டியை கொன்றவருக்கு 2 ஆண்டு சிறை

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ரிவர்சைடு நகரத்தில் வசித்து வருபவர் ஏஞ்சல் ரமோஸ் கோரல்ஸ். நாள் முழுக்க கஞ்சா புகைக்கும் வழக்கம் உள்ள இந்த வாலிபர் பிறந்து 4 மாதங்களே ஆன கனேலோ என்ற நாய்க்குட்டியை கொடூரமாக சித்ரவதை செய்து கொன்று விட்டார். அத்துடன் அதை வீடியோ படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

அந்த வீடியோவைப் பார்த்து அதிர்ந்து போனவர்கள் செய்த புகார்கள் பேரில் அமெரிக்க சட்ட அலுவலகம் நடவடிக்கையில் இறங்கியது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பப்டார். நாயை சித்ரவதை செய்து, ரத்தம் சிந்த வைத்ததில் அவரது ஆடைகளில் ரத்தக்கறை படிந்திருந்தது. நாய்க்குட்டி தனது கட்டுப்பாட்டை இழந்து விட்ட ஆத்திரத்தில்தான் அதை சித்ரவதை செய்து கொன்றதாக அவர் வாககுமூலம் அளித்தார்.

இதையடுத்து அவர் நாயை சித்ரவதை செய்து கொன்றது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதனால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ரிவர்சைடு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அவர் உடனே அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!