ரன்மல் கொடித்துவக்கு இடமாற்றம்
#Police
Prathees
3 years ago

நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் நபர் ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அவர் வைத்திய சேவைகள் மற்றும் நலன்புரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் அவதூறான நடத்தை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று காலை அறிவித்திருந்தது.



