நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

#SriLanka #School #Temple #Festival #Nallur #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் புதன்கிழமை (09.09.2026) விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிறஞ்சனுக்கு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து அதிகரிக்கும் என்பதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4