பிரான்ஸ் மருத்துவப் பணியாளருக்கு மூன்றாவது தடுப்பூசிக்குப் பரிந்துரை
பிரான்ஸின் அதி உயர் சுகாதார அதிகார சபை நாட்டின் மருத்துவத் துறைப்பணியாளர்கள், நோயாளர் பராமரிப்பாளர்கள்
ஆகிய பிரிவினருக்கு மூன்றாவது தடுப்பூசி ஏற்றுமாறு பரிந்துரை செய்துள்ளது.
தற்சமயம் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளர்கள் மற்றும் பலவீனமான உடற் பாதுகாப்புக் கொண்டவர்களுக்கு மட்டுமே மூன்றாவது ஊக்கத்(booster) தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகிறது.அடுத்த கட்டமாக அதனை ஏனைய பிரிவினர்களுக்கும் விஸ்தரிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசி ஏற்றும் தீர்மானம் எதுவும் இன்னமும் எடுக்கப்படவில்லை. ஆனால் நோயாளர்களையும் மூதாளர்களையும் பராமரிக்கின்றவர்கள், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கின்றவர்கள் அடங்கிய சுகாதார-சமூகப் பணியாளர்களுக்கு
மூன்றாவது தடுப்பூசி அவசியம் என்பதை சுகாதார அதிகார சபை(la Haute autorité de Santé) பரிந்துரைத்திருக்கிறது.
பிரான்ஸில் மருத்துவ சுகாதார சமூகப்பணியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றுவதற்குப் பின்னடித்து வந்த்தை அடுத்து அவர்களுக்கு அதனைக்கட்டாயமாக்கும் தீர்மானத்தை அரசு எடுத்
திருந்தது தெரிந்தே. இதேவேளை - ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் (European Medicines Agency - EMA) 18 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் மூன்றாவது 'பைஸர் - பயோஎன்ரெக்' தடுப்பூசி
ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி உள்ளது.