சுவிற்சலாந்தின் மிகப்பெரிய நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற்றம்!
#world_news
#Switzerland
Mugunthan Mugunthan
4 years ago
ஒரு புதிய 2020 ஆய்வு அதிக எண்ணிக்கையிலான மக்கள் நகர்ப்புற மைங்களை விட்டு வெளியேறி விட்டதாக குறிப்பிடுகிறது. இந்தப் போக்கு குறிப்பாக சூரிச், பாசல், ஜெனீவா. லுசேர்ன், பேர்ன், லௌசான், சென்காலன், லுகானோ மற்றும் பீல் போன்ற இடங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகையின் மிகப்பெரிய இழப்பாளர்கள் சூரிச் பகுதியாகும். அதனை தொடர்ந்து ஜெனீவா 3350 பேர், பாசல் 1994 என 5347 குடியிருப்பாளர்களை இழந்தது.
தொற்று நோயுடன் தொடர்புடைய கட்டுப்பாடுகளால் முக்கிய நகரங்களின் கவரச்சியானது குறைந்துள்ளது என ஆய்வு காட்டுகிறது.
எனவே அங்கு குடியேற விரும்பும் குடும்பங்கள் குறைவாக இருந்ததில் ஆச்சரியமில்லை. அத்துடன் குறிப்பாக தொலைதொடர்பு வசதிகள் தங்கள் அலுவலகத்திற்கு அருகாமையில் இருப்பது குறைவான முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்தது.