உலக மக்களை எச்சரிக்கும் யு டியூப் நிறுவனம்

#Covid Vaccine
Prasu
3 years ago
உலக மக்களை எச்சரிக்கும் யு டியூப் நிறுவனம்

யூடியூப் நிறுவனமானது, கொரோனா தடுப்பூசியை எதிர்த்து வெளியிடப்படும் வீடியோக்கள் உடனே நீக்கப்பட்டுவிடும் என்று எச்சரித்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும், ஒரு சில நாடுகளில் மக்கள் தடுப்பூசியை எதிர்க்கிறார்கள். அமெரிக்க நாட்டில் தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யூடியூப் சேனலில் வீடியோக்கள் வருகிறது.

இதனை தடுப்பதற்காக, யூடியூப் நிறுவனமானது, புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன் படி, தடுப்பூசிக்கு எதிரான வீடியோவை யாரேனும் வெளியிட்டால், அது உடனடியாக அழிக்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமன்றி, சில நாட்களுக்கு முன் அமெரிக்க மக்கள், யூடியூபில் தடுப்பூசிக்கு எதிரான கருத்துகள் கொண்ட வீடியோக்களை பரப்பியுள்ளனர். அந்த பக்கம் நிர்வாகத்தால் முடக்கப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் முகநூல் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும், தடுப்பூசியை எதிர்த்து கருத்துக்களை பரப்ப தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!