கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,600பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு!
Keerthi
3 years ago

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,600பேர் பாதிக்கப்பட்டதோடு 39பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 98ஆயிரத்து 800பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 620பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 45ஆயிரத்து 024பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 15இலட்சத்து 26ஆயிரத்து 156பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.



