பிரான்ஸ் முழுவதும் கோவிட் -19 வகுப்பறைகள் மூடப்பட்டன.

#world_news
பிரான்ஸ் முழுவதும் கோவிட் -19 வகுப்பறைகள் மூடப்பட்டன.

பிரான்ஸில் புதிய கல்வி ஆண்டில் கிட்டத்தட்ட ஒரு மாதம் மற்றும் கொவிட் தொற்றுக்களால் மூடப்பட்ட வகுப்புகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது..

கொவிட் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக பிரான்ஸில் தற்போது 2400க்கும் குறைவான வகுப்புக்கள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொடிய வைரஸ் தொற்றுக்கள் வீழ்ச்சியடைந்ததால் கடந்த வாரம் கிட்டத்தட்ட 3300 குறைவாக இருந்தது என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.

கொவிட் தொற்றுக்களின் காரணமாக வகுப்பறை மூடுதலுக்கான சமீபத்திய புள்ளிவிபரம், நாடு முழுவதும் 2366 வகுப்புக்கள். இது பிரான்ஸில் உள்ள மொத்த வகுப்புகளின் எண்ணிக்கையில் வெறும் 0.45சதவீதமே ஆகும்.

ஒரு மாணவர் அல்லது ஆசிரியர் நேர் சோதனைக்குட்பட்டால் தொடக்கப் பள்ளிகளில் வகுப்புகள் மூடப்படும். ஆனால் கல்லுாரி அல்லது லைசீயில் தடுப்புசி போடாத மாணவர்கள் மட்டுமே தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவர். மற்றவர்கள் வைரஸிற்கு எதிர் சோதனையை காண்பித்தால் வகுப்புக்கு தொடர்ந்து வரலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!