இலங்கையில் மதுபான நிலையங்களை திறப்பதற்கு பேய்தான் காரணமா?

#SriLanka #government
Yuga
3 years ago
இலங்கையில்  மதுபான நிலையங்களை திறப்பதற்கு பேய்தான் காரணமா?

மதுபான நிலையங்களை திறப்பது தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், மதுபான நிலையங்களை திறப்பதற்கு உத்தரவு வழங்கியது யார்? பேயாக இருக்கலாம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மதுபான நிலையங்களை திறக்க யார் உத்தரவிட்டார்கள் என்பது சரியாக தெரியாவிட்டால் இதுவே பதில்.நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கத்திற்கு பணம் இல்லையெனவும் அதனாலேயே மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

செல்வந்தர்களுக்கு மதுபானங்களை இணையவழி ஊடாக வீட்டுக்கே கொண்டுவரலாம். ஆனால் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் அன்றாடம் மூன்று வேளை உணவை பெற்றுக்கொள்வதற்கு சிரமப்படுபவர்களே இன்று மதுக்கடைகளுக்கு முன்னால் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

எனவே மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டமையானது ஒரு அருவருப்பான செயலாகுமெனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!