கணவன், மனைவியாக களமிறங்கும் வெங்கட் பிரபு, சினேகா...!

அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் ஆகிய படங்களை இயக்கியவர் அருணாச்சலம் வைத்தியநாதன். இவர் அடுத்ததாக முழுக்க குழந்தைகளைக் கொண்டு புதிய படமொன்றை இயக்கவுள்ளார்.
இந்தப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் வெங்கட் பிரபு நடிக்கிறார். இந்தப்படம் மூலமாக நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் திரையுலகிற்கு நடிகையாக திரும்பியுள்ளார் சினேகா.
‘ஷாட் பூட் 3‘ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் மற்றும் ட்ரெடண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. இதில் வெங்கட் பிரபு மற்றும் சினேகா இருவரும் கணவன் மனைவியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
யோகி பாபுவும் இந்தப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாவது பெண் குழந்தை பிறந்த பிறகு, திரையுலகிலிருந்து ஒதுங்கியே இருந்த சினேகா, தற்போது அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கும் ‘ஷாட் பூட் 3’ படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு நடிக்க திரும்பியுள்ளார்.
குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் இந்தப்படத்தில் வெங்கட் பிரபு, சினேகாவுடன் நிறைய குழந்தைகளும் இணைந்து நடிக்கவுள்ளனர்.



