எல்லாம் மாறும் ஓர் நாளில்
Reha
3 years ago

எல்லாம் மாறும் ஓர் நாளில்
என்று எழுடா இத் திருநாளில்
பொல்லா துன்பம் ஓடி மறைய
புகழாய் மாறுவாய் இவ் வாழ்வில்
நம்பிக்கை ஒன்றே பேராயுதம்
நம்பி வணங்கு அதுவே முதல் ஆலயம்
தும்பிக்கையை விட பலமாயிரம்
துதித்து எழுடா சுகம் உனதாகிடும்
எத்தனை எத்தனை வலிகள் உன்னை தொடர்ந்தாலும்
அத்தனையும் வழிகளாய் உனக்கும் திசைகாட்டும்
கத்தியில் நடக்கும் வாழ்க்கை இது என்றாலும்
புத்தியில் உயிர்க்க - நாளை புடம் போட்டிடும்
பக்தியில் உருகி கொஞ்சம் அவன் பாதம் போற்றிடு
படைத்தவன் உள்ளான் என எழுந்து நடை போட்டுடு
வருவது எல்லாம் வரட்டும் - தருவதை எல்லாம்
தரட்டும்
வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடக் கற்றுக் கொள்....!
வெற்றி பெற்று உலகானாவர் மட்டுமல்ல
வாழ்ந்து முடிப்பது கூட வரலாறுதான் என்ற வாசகத்தை- மனதில் வை
மாயைகள் உளைச்சல்களுக்கு மறுநொடியே
தீயை வை
அடி உடை தகர்த்தெறி



