524 மாணவர்கள், கல்வியாளர்களுடன் கொழும்பை வந்தடைந்தது பிரம்மாண்ட கப்பல்!

#SriLanka #Colombo #LANKA4 #students #University #Passenger #Ship
Abi
41 minutes ago
524 மாணவர்கள், கல்வியாளர்களுடன் கொழும்பை வந்தடைந்தது பிரம்மாண்ட கப்பல்!

பெர்முடா நாட்டின் கொடியின் கீழ் பயணிக்கும் WORLD ODYSSEY பயணிகள் கப்பல், 524 பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களுடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலில் 524 மாணவர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் பயணித்துள்ளதுடன், 181 பணியாளர்களும் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் கண்டி மற்றும் தென் மாகாணத்திலுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுள்ளதுடன், ஏனைய மாணவர்கள் கொழும்பு நகரில் சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலில் பயணிக்கும் போதும் கல்வி நடவடிக்கைகள் தொடர்வது இக்கப்பலின் சிறப்பம்சமாகும். இதன்போது விரிவுரையாளர்கள் வகுப்புகளை நடத்துவதுடன், மாணவர்களும் தமது கல்விச் செயற்பாடுகளைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்தக் கப்பல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர் குழுக்கள் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளன.

சுற்றுலா விசாக்களின் அடிப்படையில் இலங்கைக்கு வருகை தந்துள்ள இப்பயணிகளால் நாட்டுக்கு அந்நியச் செலாவணி வருமானம் கிடைப்பதுடன், ஹோட்டல்கள், போக்குவரத்துச் சேவைகள் உள்ளிட்ட சுற்றுலாத்துறை சார்ந்த வர்த்தகங்களுக்கும் பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!