கழிவு முகாமைத்துவத்தில் தாமதம் வேண்டாம் – அனைத்து நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும்!

#SriLanka #PrimeMinister #Project #LANKA4 #Harini Amarasooriya
Abi
39 minutes ago
கழிவு முகாமைத்துவத்தில் தாமதம் வேண்டாம் – அனைத்து நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும்!

"திட்டங்களை ஆரம்பிப்பதைப் போலவே அவற்றை நிறைவு செய்வதற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாகத் தத்தமது பணிகளை மட்டும் முன்னெடுப்பதற்குப் பதிலாக, அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து முடிவுகளை எடுத்து, நிலவும் பிரச்சினைகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழுக்களில் முடிவுகளை எடுப்பதைப் போலவே, அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

" கொழும்பு மாவட்டக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக நவம்பர் 18ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கழிவு முகாமைத்துவப் பணிகளைச் சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்பும், பொறுப்புக்கூறலும் அவசியம் என்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!