காசா மருத்துவர் அபு சஃபியாவின் சிறைவாசம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு
காசாவின் கமல் அத்வான் மருத்துவமனையின் இயக்குநரான ஹுசாம் அபு சஃபியாவை, எவ்விதக் குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் தொடர்ந்து சிறைவைக்க இஸ்ரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அபு சஃபியாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ள தகவலின்படி, பெர்ஷேபாவில் உள்ள நீதிமன்றம் ஒன்று, அவரது சிறைவாசத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
"தமது சிறைவாசம் மீண்டும் ஏன் நீட்டிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய டாக்டர் ஹுசாம், வட காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் ஒரு மருத்துவராகத் தனது மனிதாபிமானப் பணியையும் தொழில்முறை கடமையையும் ஆற்றியதற்காகவே தான் தண்டிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்" என்று அந்தச் சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 டிசம்பரில், வட காசாவில் உள்ள அந்த மருத்துவமனையில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய சோதனையின்போது, அபு சஃபியா மற்ற மருத்துவப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுடன் சேர்த்து கைது செய்யப்பட்டார்.