சம்பளத் திருத்தத்தில் அநீதி – வவுனியா பல்கலைக்கழக ஊழியர்கள் போர்க்கொடி!
#SriLanka
#Vavuniya
#Protest
#LANKA4
#Salary
#University
Abi
47 minutes ago
பல்கலைக்கழகக் கட்டமைப்பில் முன்மொழியப்பட்டுள்ள சம்பளத் திருத்தங்களில் பாகுபாடு காட்டப்படுவதாகக் குற்றம்சாட்டி, வவுனியா பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்கள் இன்று (18) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தின் சம்பளத் திருத்தத் திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள சம்பள மாற்றங்களில் பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சம்பளத் திருத்தத்தில் தமக்கு உரிய நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே ஊழியர்கள் இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.