சூடானில் கடந்த 10 மாதங்களில் 2,230க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொலை
சூடானில் ஜனவரி முதல் அக்டோபர் 2026 வரையிலான காலத்தில் 2,230க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் 1,630-க்கும் மேற்பட்டோர் ட்ரோன் தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர் என்று ஐநா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், சூடானில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்ந்து மீறப்பட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
2026ம் ஆண்டின் முதல் பாதியை உள்ளடக்கிய புதிய அறிக்கை, குறைந்தது 1,390 பொதுமக்களின் மரணங்களைப் பதிவு செய்துள்ளது; இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை ட்ரோன் தாக்குதல்களால் ஏற்பட்டவை.
இது தவிர, ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் மேலும் 840 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உண்மையான உயிரிழப்புகள், உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை விட "அதிகமாக இருக்கக்கூடும்" என்று ஐநா எச்சரித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் பதிவான பொதுமக்களின் உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேலானவை கோர்டோஃபான் (Kordofan) பகுதியில் நிகழ்ந்துள்ளன; அதற்கு அடுத்தபடியாக டார்பூர் (Darfur) பகுதியில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.