சைபீரியாவில் ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழப்பு
#Death
#Flight
#Accident
#Russia
#LANKA4
#Military
#L4
#Siberia
Prasu
1 hour ago
சைபீரியாவில் ரஷ்ய ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அன்டோனோவ் ஏஎன்-12 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், சைபீரியாவின் கெமரோவோ பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
உள்ளூர் செய்திகளின்படி, விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத் தலைநகரிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யகுனோவோ கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்ததை கெமரோவோ பிராந்திய ஆளுநர் இல்யா செரெட்யுக் உறுதிப்படுத்தியுள்ளார்.