வட்டவளை பாடசாலையில் உணவு ஒவ்வாமை – 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

#SriLanka #Hospital #Food #LANKA4 #students
Abi
21 minutes ago
வட்டவளை பாடசாலையில் உணவு ஒவ்வாமை – 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

வட்டவளை, டெம்பஸ்டோவ் தோட்டப் பாடசாலையில் இன்று (17) காலை வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 35 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை உணவை உட்கொண்ட பின்னர் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் நெஞ்சுவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு காலை உணவாக சோறு, உருளைக்கிழங்கு, பீட்ரூட் கறி மற்றும் கீரை வகையொன்று வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலையின் 3ஆம் தரம் முதல் 5ஆம் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், மாணவர்களின் உடல்நிலை பாரதூரமான நிலையில் இல்லை என மாவட்ட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!