இலங்கையில் முதன்முறையாக பிரெய்லி வடிவில் சிறுவர் பாதுகாப்புச் சட்டம் வெளியீடு!

#SriLanka #LANKA4 #national
Abi
29 minutes ago
இலங்கையில் முதன்முறையாக பிரெய்லி வடிவில் சிறுவர் பாதுகாப்புச் சட்டம் வெளியீடு!

இலங்கையில் முதன்முறையாக, 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கை ஆகியவற்றை பிரெய்லி (Braille) முறையில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை முன்னெடுத்துள்ளது.

இதன் மூலம், பார்வைக் குறைபாடுகளை எதிர்கொள்ளும் சிறுவர்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிகள், பொறுப்புகள் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கை தொடர்பான அடிப்படைத் தகவல்களைத் தாங்களாகவே அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

அனைத்துச் சிறுவர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், எவ்வித பாகுபாடுமின்றி ஒவ்வொரு சிறுவருக்கும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அறிவு மற்றும் தகவல்களைச் சமமாகப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் முக்கிய நோக்கமாகும்.

அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!