கட்டுநாயக்க விமான நிலையத்தில் 13 கோடி ரூபா குஷ் போதைப்பொருளுடன் மூவர் கைது!

#SriLanka #ARREST #Airport #International #LANKA4 #Katunayaka
Abi
35 minutes ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 13 கோடி ரூபா குஷ் போதைப்பொருளுடன் மூவர் கைது!

மலேசியாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த மூன்று இலங்கையர்களிடமிருந்து சுமார் 13 கோடியே 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான ‘குஷ்’ வகை கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (16) அதிகாலை மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு வந்த மூவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர், விமான நிலையத்தின் பசுமை வழிப்பாதையூடாக வெளியேற முயன்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரது பயணப் பைகளில் மதுபானப் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.384 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

இதன் பெறுமதி 4 கோடியே 38 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே விமானத்தில் பயணித்த நெடுங்கேணியைச் சேர்ந்த 35 வயதுடைய உருக்கு ஒட்டும் தொழிலாளர் மற்றும் கண்டியைச் சேர்ந்த 46 வயதுடைய வர்த்தகர் ஆகிய இருவரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது பயணப் பைகளில் மதுபானப் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8.664 கிலோகிராம் குஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதன் பெறுமதி 8 கோடியே 66 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் தாய்லாந்தில் போதைப்பொருளைக் கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் ஊடாக இலங்கைக்குக் கடத்தி வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் மூவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!