2027 வரவு செலவுத் திட்ட விவாதம் இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது!
#SriLanka
#Parliament
#LANKA4
#budget
#Debate
Abi
1 hour ago
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாவது நாள் இன்றாகும் (16). சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது. அதன் மூன்றாவது நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ளது.
இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடரவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.