ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்க தலைவர்களிடையே நடைபெறவுள்ள முத்தரப்பு சந்திப்பு

#China #Meeting #America #Russia #LANKA4 #President #L4
Prasu
38 minutes ago
ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்க தலைவர்களிடையே நடைபெறவுள்ள முத்தரப்பு சந்திப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையேயான முத்தரப்பு சந்திப்பு நவம்பர் 19 அன்று சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி புடின், ஜனாதிபதி ஜின்பிங் மற்றும் ஜனாதிபதி டிரம்ப் ஆகியோருக்கு இடையே 19ம் திகதி முத்தரப்பு சந்திப்பை நடத்துவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது, இந்த சந்திப்பு ஏபெக் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஷென்சென் நகரில் நடைபெறும்” என பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.

முத்தரப்பு உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாகவும் அதனை நடத்துவதற்கு மாஸ்கோ, பெய்ஜிங் மற்றும் வாஷிங்டன் கொள்கையளவில் தயாராக இருப்பதாகவும் கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். 

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) உச்சிமாநாடு நவம்பர் 18-19 திகதிகளில் ஷென்சென் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!