எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் ஏறித் காதலை வெளிப்படுத்திய ரஷ்யத் தம்பதியை நாடு கடத்த திட்டம்
நியூயார்க் நகரின் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சிக்கு ஏறி, அங்கு காதலை வெளிப்படுத்திய ரஷ்ய ஜோடி ஒன்று, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படக்கூடும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
33 வயதான ஏஞ்சலா நிகோலாவ் மற்றும் 32 வயதான இவான் குஸ்நெட்சோவ் ஆகிய இருவரும், கடந்த ஜூலை மாதம் இந்த வானளாவிய கட்டிடத்தின் உச்சிக்கு ஏறி, "அதிகாரத்தின் மீதான அன்பை விட, அன்பின் சக்தி மேலோங்கும்போது உலகம் அமைதியைக் காணும்" என்று எழுதப்பட்ட கொடியை அங்கு காட்டினர்.
அதனைத் தொடர்ந்து, குஸ்நெட்சோவ், நிகோலாவிடம் தனது காதலை வெளிப்படுத்தி திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார் (propose).
இந்த வழக்கு தொடர்பாக, கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 12) நியூயார்க்கில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் அந்த ஜோடி ஆஜரானது.
அப்போது, தங்களை நாடு கடத்தக்கூடும் என்ற அச்சத்தினால் ஏஞ்சலா நிகோலாவ் கண்ணீர் விட்டதைக் காண முடிந்தது. இது குறித்து ஊடகங்களிடம் பேசிய குஸ்நெட்சோவ், "நாங்கள் எந்தச் சொத்துக்கும் சேதம் விளைவிக்கவில்லை.
யாரையும் ஆபத்தில் ஆழ்த்தும் எண்ணமும் எங்களுக்கு இல்லை. அன்பைப் பற்றிய ஒரு செய்தியை மட்டுமே நாங்கள் தெரிவிக்க விரும்பினோம். எங்களைப் பாதுகாத்துக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.