கொழும்பில் 20 வயது யுவதி ஒருவர் சடலமாக மீட்பு
#SriLanka
#Colombo
#Death
#Investigation
#LANKA4
#Girl
#L4
Prasu
19 minutes ago
கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 20 வயது யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
யுவதியின் பெற்றோர் வங்கி தேவைக்காக வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த நிலையில் அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
பெற்றோர் மீண்டும் வீடு திரும்பியபோது, மகள் அறையில் அசைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், யுவதியின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.