யாழில் நீரிழிவு நோய் அபாயம் தீவிரம் – 2 இலட்சம் பேர் பாதிப்பு எனப் பேராசிரியர் அதிர்ச்சித் தகவல்!

#SriLanka #Jaffna #District #LANKA4 #diabetes #University
Abi
25 minutes ago
யாழில் நீரிழிவு நோய் அபாயம் தீவிரம் – 2 இலட்சம் பேர் பாதிப்பு எனப் பேராசிரியர் அதிர்ச்சித் தகவல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமரன், இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்ட நீரிழிவு கழகத்தின் ஏற்பாட்டில் இன்று (14.11.2026) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு மருத்துவ முகாமை, பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு. உமாசங்கருடன் இணைந்து அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த பத்து ஆண்டுகளாக நீரிழிவு நோயாளர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் யாழ். மாவட்ட நீரிழிவு கழகத்தின் சேவைகளைப் பாராட்டினார்.

நீரிழிவு நோய் உலகளாவிய ரீதியில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன், இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, ஆரம்பத்தில் வெளிப்படையான அறிகுறிகள் இன்றி உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதிக்கக்கூடிய இந்நோய், 'மௌனக் கொல்லி'யாக உருவெடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஆய்வுகளின் அடிப்படையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் சுமார் 6 இலட்சம் மக்கள் தொகையில் இரண்டு இலட்சம் பேர் வரையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அவர் எச்சரித்தார்.

மேலும், இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் முயற்சிகள் மாத்திரம் போதுமானதல்ல எனவும், சமூக அமைப்புகள், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

அதேவேளை, நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் நின்றுவிடாமல், மக்கள் தமது அன்றாட வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, சீனி மற்றும் மாச்சத்து அதிகமுள்ள உணவுகளைக் கட்டுப்படுத்துதல், சீரான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுதல் மற்றும் தினசரி உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல் ஆகியவற்றின் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.

மேலும், மக்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக நடைபாதைகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட உடற்பயிற்சி வசதிகளை உள்ளூராட்சி மன்றங்கள் மேம்படுத்தி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நீரிழிவு நோயைத் தடுப்பதும் கட்டுப்படுத்துவதும் தனிநபர்களின் பொறுப்பு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும் என்றும் பேராசிரியர் சுரேந்திரகுமரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!