லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை சடுதியாக உயர்வு!

#SriLanka #prices #people #Laugfs gas #LANKA4 #L4
Prasu
1 hour ago
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை சடுதியாக உயர்வு!

லாஃப்ஸ்சமையல் எரிவாயு நிறுவனம், தனது 12.5 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக LPG சிலிண்டரின் விலையை 1,775 ரூபாயால் உயர்த்தியுள்ளது. 

இதன்படி, இதன் விலை 4,965 ரூபாயிலிருந்து 6,740 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது. 

மேலும், 5 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலையை 732 ரூபாயால் உயர்த்தி, 1,988 ரூபாயிலிருந்து 2,720 ரூபாயாக மாற்றியுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

சர்வதேச சந்தையில் LPG கொள்முதல் செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் விலை உயர்ந்துள்ளதால், இலங்கைக்கு LPG இறக்குமதி செய்வதற்கான செலவும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

அதேவேளையில், தனது விநியோகஸ்தர் வலையமைப்பு மூலம் LPG சிலிண்டர்களைத் தடையின்றி தொடர்ந்து வழங்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது.

மேலும், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வீட்டு உபயோக LPG விலைகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!