8 நாட்களில் 1033.55 கோடி வசூல் செய்துள்ள ‘ராமாயணா’

#Actor #Actress #TamilCinema #LANKA4 #money #Movie #L4
Prasu
41 minutes ago
8 நாட்களில் 1033.55 கோடி வசூல் செய்துள்ள ‘ராமாயணா’

இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவான 'ராமாயணா' திரைப்படம் கடந்த 5ந் திகதி வெளியானது. 

இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுமார் ரூ.2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி, ராவணன் வேடத்தில் யாஷ் அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். 

பிரமாண்டமான காட்சியமைப்புகள், நட்சத்திரங்களின் பங்களிப்பு என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், 8 நாட்களில் உலகளவில் ரூ.1033.55 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.675.05 கோடியும், வெளிநாடுகளில் ரூ.358.50 கோடியும் வசூல் செய்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!