கிளிநொச்சியில் சிறுவர், பெண்கள் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

#SriLanka #Kilinochchi #Women #LANKA4 #discussion #Violence
Abi
32 minutes ago
கிளிநொச்சியில் சிறுவர், பெண்கள் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் மற்றும் பாலின வன்முறைக்கு எதிரான கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தலைமையில் நேற்று (12.11.2026) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, மாவட்டத்தில் சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலைச் சம்பவங்கள் குறித்து கவலை வெளியிடப்பட்டதுடன், சிறுவர்களின் உளநலம், தன்னம்பிக்கை மற்றும் மனவலிமையை மேம்படுத்த அனைத்துத் துறைசார் நிறுவனங்களும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், பாடசாலை வருகை ஒழுங்கீனமாகக் காணப்படும் மாணவர்களை அடையாளம் காணுதல், பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கான பிறப்புப் பதிவுகளை மேற்கொள்ளுதல், முன்பள்ளிக் கல்வி மற்றும் சிறுவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கல் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அத்துடன், சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களின் பாதுகாப்பு, குடும்பங்களுடன் மீள இணைக்கப்படும் சிறுவர்களின் நலன் மற்றும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதற்கிடையில், பாலின அடிப்படையிலான வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாகக் கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் அவற்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் வடக்கு மாகாண சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகம் உள்ளிட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்வி, சுகாதாரம், பொலிஸ் மற்றும் துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!