வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு 84 புதிய வாகனங்கள் – மொத்த எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு!

#SriLanka #Department #LANKA4 #vehicle #Forest
Abi
39 minutes ago
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு 84 புதிய வாகனங்கள் – மொத்த எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு!

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் களப்பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிதாக 84 சிங்கிள் கெப் ரக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் திணைக்களத்தின் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது.

வனவிலங்குகளைப் பாதுகாத்தல், சட்டவிரோத வேட்டையாடல்களைத் தடுத்தல், வனவிலங்கு குற்றங்களைக் கண்காணித்தல் மற்றும் மனித - வனவிலங்கு மோதல்களைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கு இந்தப் புதிய வாகனங்கள் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, வனப்பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளை விரைவுபடுத்துவதுடன், அவசர நிலைமைகளின்போது சம்பவ இடங்களுக்கு அதிகாரிகள் உடனடியாகச் செல்வதற்கும் இந்த வாகனங்கள் துணைபுரியும்.

இதன் மூலம் வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தவும், மனித - வனவிலங்கு மோதல்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!