ஜெனீவாவில் 14.6 மில்லியன் டாலருக்கும் மேல் ஏலம் போன அரிய வைரம்
'பல்காரி பிங்க்' (Bulgari Pink) என்று அழைக்கப்படும், 24 காரட் எடையுள்ள அரிதான இளஞ்சிவப்பு வைரம் ஒன்று, ஜெனீவாவில் நடைபெற்ற கிறிஸ்டிஸ் நிறுவனத்தின் ஏலத்தில் 14.6 மில்லியன் டாலருக்கும் அதிகமான விலைக்கு விற்பனையாகியுள்ளது.
மரகத வடிவில் (emerald-cut) செதுக்கப்பட்ட இந்த வைரம், 1950களில் ஒரு குடும்பத்தால் வாங்கப்பட்டு, அதுவரை அதே குடும்பத்தின் வசம் இருந்தது.
இந்த ஏலத்தில் இது 12.1 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு விற்பனையானது; இது ஏலத்திற்கு முன்பாக கணிக்கப்பட்ட 10 முதல் 15 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் என்ற மதிப்பீட்டு வரம்பிற்குள் அமைந்தது.
இந்த விற்பனை, அதன் விலைக்காக மட்டுமல்லாமல், அந்த வைரத்தின் தனித்துவமான பின்னணிக்காகவும் (provenance) அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற கோல்கொண்டா சுரங்கங்களிலிருந்து உருவானதாகக் கருதப்படும் இந்த 'பல்காரி பிங்க்' வைரம், பல தசாப்தங்களாக நீளும் ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது.
இது உலகின் மிகச்சிறந்த நகை நிறுவனங்களில் ஒன்றையும், வரலாற்றில் வைரங்கள் கிடைத்த மிக முக்கியமான இடங்களுள் ஒன்றையும் இணைக்கும் ஒரு பாலமாகத் திகழ்கிறது.