நியூயார்க்கில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி
#Death
#Newyork
#LANKA4
#Building
#collapse
#L4
Prasu
21 minutes ago
நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் மூன்று அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், மூன்று தீயணைப்பு வீரர்கள் உட்பட 17 பேர் காயமடைந்தனர்; குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
1930ல் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், பெட்ஃபோர்ட் அவென்யூவில் (Bedford Avenue) எண் 2625 என்ற இடத்தில், அருகில் நடைபெற்று வந்த அகழ்வுப் பணியின் பள்ளத்திற்குள் முழுமையாகச் சரிந்து விழுந்துள்ளது.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த, 6 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் மீட்கப்பட்டு, அவசர மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி X தளத்தில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அப்பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு நியூயார்க் நகர மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.