அனோஜன் சிவராசாவின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

#SriLanka #Meeting #President #AnuraKumaraDissanayake #SaudiArabia #SivarasaAnojan
Abi
33 minutes ago
அனோஜன் சிவராசாவின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட அனோஜன் சிவராசாவின் குடும்ப உறுப்பினர்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது அனோஜன் சிவராசாவின் பெற்றோருடன் சுமூகமாக உரையாடிய ஜனாதிபதி, உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் இலங்கை மக்களுக்காகக் குரல் கொடுப்பது தனது பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அனோஜன் சிவராசாவின் விடுதலைக்காக நடவடிக்கை எடுத்த சவூதி அரேபிய அரசாங்கம், அந்நாட்டுக்கான தூதரகம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட தரப்பினருக்கும், இன, மத, கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஜனாதிபதி விசேட நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இது ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து பெற்றுக்கொண்ட வெற்றி என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!