செம்மணியில் சாரதிகளுக்கு திடீர் போதைப்பொருள் பரிசோதனை!

#SriLanka #drugs #LANKA4 #Driver
Abi
1 day ago
செம்மணியில் சாரதிகளுக்கு திடீர் போதைப்பொருள் பரிசோதனை!

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் ஏ9 வீதியால் பயணிக்கும் வாகனச் சாரதிகளை இலக்குவைத்து இன்று (12) காலை திடீர் போதைப்பொருள் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

செம்மணிச் சந்தியில் காலை 9.00 மணி முதல் இந்தப் பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது அரச மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களின் சாரதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!